Explore
Also Available in:

வியப்பூட்டும் எறும்பின் வித்தைகள்

Lucien Tuinstra
மொழிபெயர்த்தார் Dr. Vedha Swamidoss

மாயாஜாலமான இடமறியும் அணி சேர்ந்த ஒரு விளையாட்டில் நீங்கள் எப்போதாவது பங்கு பெற்றிருக் கிறீர்களா? (உங்களை சுற்றியிருக்கும் இடத்தைக் குறித்த அடையாளங்கள் உங்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும்). ஆனால் நீங்கள் உங்கள் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்? முதல் குழுவானது வெற்றியோடு திரும்புகிறது.

© CMI1687-cartoon

இதே சம்பவத்தை விலங்குகளின் வாழ்வில், அவைகள் இனப்பெருக்கத் திற்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும், திரும்பி தன் இடத்திற்கு எப்படி வழியை அறிந்து வருகின்றது என்று பார்ப்போம். பசுபிக் சால்மன் மீன்,1 செம்மஞ்சள் இன வண்ணத்துப்பூச்சி2 என இவை போன்று வலசை போகும் பறவை,3 விலங்குகள் குறித்து பார்க்கலாம். சின்னஞ்சிறு ஜீவஜந்துக் களும் கூட உணவுக்காக வெகுதூரம் சென்று மீண்டும் இடம் திரும்புகின்றன. இது விளையாட்டல்ல. வாழ்வா, சாவா போராட்டம். நம் சமூகத்தோடு ஒன்றர கலந்து வாழும் சிறிய எறும்புகள் இனமானது கூட்டமாக குடியிருக்கும் அமைப்பைக் கொண்டது. இந்த கூட்டத்தை விட்டு பிரிந்து சில உணவுக்காக வெளியே சென்றாலும் கூட ஆச்சரியமூட்டும் வகையில் அவைகள் தங்கள் வீட்டினை அடையாளம் கண்டுவிடும்.

விலங்குகளின் சுபாவங்கள் மற்றும் வழிகாட்டுதல் திறமைகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் நம்மை திகைப்படைய செய்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தேசத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் சில குறிப்பிடத்தக்க வழிமுறைகளை திறமையுடன் கையாண்டு வீட்டை வந்துசேரும் எறும்புகளின் அதீத அறிவை ஆராய்ச்சி செய்து 2022ம் ஆண்டு கண்டுபிடித்து வெளியிட்டனர்.4

ஒரு எறும்புக்கூட்டத்தின் வீடு (கூடு) மற்றும் அதன் உணவு ஆதாரமான (மரம்) பொதுவாக அவைகளுக்கான ஊட்டச்சத்துக்களை தேடுகிற கூட்டம்.

வீட்டின் வழியை எதிர்நோக்குதல்

வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வரும்படியாக மளிகைக்கடைக்கு சென்றிருக்கிறதாக கருதுவோம். நீங்கள் வழக்கமாக சென்று வாங்கக்கூடிய கடையாக இருக்கலாம். அல்லது வேறு கடையாகவோ, சூப்பர் மார்க்கெட் ஆகவோ இருக்கலாம். எதுவானாலும் நீங்கள் வெகு சீக்கிரமாய் வீட்டை அடைந்து வந்து, பொருட்களை அலமாரியில் அடுக்கிவைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டியவற்றை சீக்கிரமாய் வைக்க வேண்டும். நீங்கள் வருகிற வழியில் பலவிதமான வளைவுகள், திருப்பங்கள் எல்லாமே நேரிடும். ஆயினும் உங்கள் வீட்டிற்கும், சூப்பர் மார்க்கெட்டிற்கும் இடையேயான கற்பனையான வழிக்கோடுகள் உங்களுக்குத் தெரியும். இதுவே வீட்டின் திசை” என அழைக்கிறோம். திசையும், தூரமும் உள்ளடங்கியது.

நீங்கள் வருகிற வழியில் இருக்கும் கட்டிடங்களையும் தாண்டி குறுகலான தூரத்தில் இருக்கும் பாதையில் வீட்டை அடைவீர்கள். சின்னஞ்சிறிய ஜீவஜந்துக்களை சிந்தித்துப்பாருங்கள். இரைதேடி சென்றவை, வழி தவறியவை எல்லாம் வெகுதூரத்திலிருக்கும் தம் வீட்டை எப்படி அடையும் ? எப்படி தவறிவிடாமல் இருக்கும்? எறும்புகள் தம் கூட்டிற்கும், தாம் இரைதேடி சென்ற இடத்திற்கும் இடையேயான திசை மற்றும் தூரம் இவை இரண்டையும் நன்கு அறிந்திருக்கும். இதையே “பாதை ஒருங்கிணைப்பு” எனலாம். இது இயற்கையாகவே அதனுள் காணப்படும். உள்ளுணர்வு திசைகாட்டியை போன்றே செயல்படும்.5 வுழியமைப்பில் சமர்த்தரான எரிக் ஹசல் கூறும்போது, பாலைவன எறும்புகளின் குறிப்பிடத்தக்க பண்பு மிகவும் ஆச்சரியமடையச் செய்யும்.

காட்சி அடையாளங்கள், பாதை அமைவுகள், பாதை தொகுப்பு, வேதித் தூண்டல் இயக்கத்தின் அடிப்படையில் அருகில் இருக்கும் உணவுப்பொருளை, அதன் மணம் அறிந்து கண்டறியும் உணர்வுரீதியான பாதை கண்டறிதலில் சூரிய திசைகாட்டி உயிரியல் கடிகாரம், தூரம் அளவிடும் கருவி என்று அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டது போன்ற அமைப்பு.6

சோதனை

மயிர்மிசியா கிராஸ்லெண்டி எனும் சிற்றினத்தைச் சார்ந்த ஒருவகையான எறும்புக்கூட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் அதன் உணவுதேடும் மரத்தில் 11மீ (36அடி) அதன் கூட்டிலிருந்து தூரம் இருக்கும்.7 இந்த இடமே முழு அளவும் திசையும் கொண்ட ஒரு வடிவியல் பொருளாகப் பார்க்கிறோம். குளிர்கோமா மயக்க நிலை” என்கிற தொழில் நுட்பத்தை அவர்கள் பயன்படுத்து கின்றனர். ஞாபக மறதியை தூண்டும் விதமாக எறும்புகளை குளிர்நிலை எனும் 0 செல்சியஸ் (32ழகு) அளவிற்கு 30 நிமிடங்கள் சோதனைக் குட்படுத் துகின்றனர்.

1687-table

பின்பு அவைகளுக்கு சிறிது சர்க்கரை உணவாகக் கொடுக்கப்பட்டு அவைகள் அறிந்திராத ஒரு இடத்தில் கொண்டு போய் விடப்படுகின்றன.கண்ணால் பார்த்து அறியக்கூடிய தடயங்கள் எதுவும் இல்லை. இவைகளையும், குளிர்நிலைக்கு சோதனைக்கு உட்படுத்தாத மரத்தில் இருக்கும் எறும்புகளையும் அறிவியலாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். மேலும் மற்ற சில கூட்டிலேயே விடப்பட்டிருந்த எறும்புகளும் பிடிக்கப்பட்டன. (பூஜ்யநிலை) அவைகளும் இதே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சில எறும்புகள் குளிர்நிலை சோதனையிலும் மற்றவைகளும் தெரியாத இடத்தில் விடப்பட்டது.

குளிர்ந்த எறும்புகளுக்கு மனது காலியாக உள்ளது

குளிர்நிலை சோதனை செய்யப்பட்ட எறும்புகளின் வெறுமையான மூளை செயல்பாடு குளிர்கோமா மயக்க நிலை எறும்புகள் தூரத்தை மறந்துவிட்டது. ஆனால் திசையை மறக்கவில்லை.4 மேலும் குளிர்கோமா நிலையில், மரத்தினடியில் பிடிக்கப்பட்டவை. சரியான திசை புலப்படுகிற வரை மெதுவாக விடப்பட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்தது. அதன் கூட்டை சிறிது மறந்து போனது. மேலும் கூட்டில் இருந்த வழக்கமான எறும்புகள் சரியான திசையில் அதன் தூரத்தை கடந்து விட்டது.

ஏற்கனவே கூட்டின் அருகில் இருக்கும் எறும்புகள் குழப்பத்தில் அருகிலேயே சுற்றிக் கொண்டேயிருந்தும், தன் கூட்டை நிதானிக்க தெரியவில்லை.

ஆய்வின் முடிவில் எறும்புகள் மறதி நிலைக்கு கொண்டுபோகப்பட்டாலும், திசையை மறக்கவில்லை. தூரத்தை மட்டுமே மறந்து போகிறது. அதேபோல கூட்டின் அருகிலேயே பிடிக்கப்பட்டு குளிர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட எறும்பு களும் கூட வீட்டை அறிந்திருக்கிற படியால் அதன் அருகிலேயே சுற்றுகின்றன.

எரிக் ஹேசல் பின்வருமாறு இந்த எறும்புகளை வகைப்படுத்துகிறார்:

பாதை கண்டுபிடித்தல் என்பது அதன் தூரத்தைப் பொறுத்து சிறிது மாறுபடுகிறது. ஆகவே உணவு தேடி எவ்வளவு தூரம் சென்றாலும் திசையை சரியாகக் கொண்டு வழியைக் கண்டுபிடித்து விடுகிறது. இது ஒருநவீன தொழில்நுட்பத்தை மிஞ்சிவிடுகிறது. ஓன்றை அறிந்து கொள்வோம். இவ்வளவு விஈயங்களையும் அவைகள் சேமித்து வைத்திருப்பது ஒரு தேனீயின் மூளையைவிட நான்கு மடங்கு சிறிய அளவிலான மூளைச் செல்களில்தான் என்பது ஆச்சரியமே. இந்த திறமைகளை யாரும் அதற்கு கற்றுக் கொடுக்கவில்லை.8

எல்லா எறும்புகளும், குளிர்நிலை கோமாநிலை, உணவு தேடிச்சென்ற இடத்தில் இருந்தவை, கூட்டின் அருகே இருந்தவை. அனைத்துமே வீடு சென்றடைய வேண்டிய வழியை நன்றாய் அறிந்திருக்கின்றன. மறதிநிலையை அடைந்த எறும்புகளும் கூட, கண்களினால் பார்க்கும் அடையாளத்தைப் பயன் படுத்தி, பாதையை தெரிந்தெடுக்கிறது.

அழகான வடிவமைப்பு

ஒரு குண்டூசியின் அளவில் இருக்கும் மூளையில் தகவல்களை சேமித்து வைக்கும் எறும்பு ஒரு கம்ப்யூட்டர் போன்றது. தம் கண்களால் பார்த்து அறியக்கூடிய தகவல்களில் மாற்றம் இருந்தால் அதை ஏற்கனவே சேர்த்து வைத்த தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து கொள்ளும்.

வெறும் வாழ்க்கைக்காக மட்டும் இந்த பின்புல தரவுகளை அவைகள் சேமித்து வைக்காமல், இயற்கையாகவே அதீத புத்திசாலித்தனத்தை கொண்டிருக் கின்றது.9 ஏனெனில் சர்வவல்லமை யுள்ள தேவனுடைய, சிருஈடிப்பான சிறிய எறும்புகளின் மேல் இவ்வளவு அக்கறையுள்ள தேவன் தாம் படைத்த ஜனங்கள் மேல் எவ்வளவு கரிசனையுள்ளவர்.

குறிப்புகள் மற்றும் குறிப்புகள்

  1. Dreves, D., Pacific salmon: the ocean’s high achievers, Creation 18(3):26–28, 1996; creation.com/pacific-salmon. உரைக்குத் திரும்பு.
  2. Poirier, J., The magnificent migrating monarch, Creation 20(1):28–31, 1997; creation.com/monarch. உரைக்குத் திரும்பு.
  3. Sarfati, J., Migratory birds use magnetic GPS, Creation 44(2):16–17, 2022; creation.com/birds-gps. உரைக்குத் திரும்பு.
  4. Pisokas, I. et al., Anesthesia disrupts distance, but not direction, of path integration memory, Current Biology 32:445–452, 2022. உரைக்குத் திரும்பு.
  5. Bell, P., Animal behaviour intelligently designed! (book review) Journal of Creation 36(1):35–40, 2022. உரைக்குத் திரும்பு.
  6. Cassell, E., Animal algorithms, Discovery Institute Press, Seattle, p. 63, 2021. உரைக்குத் திரும்பு.
  7. Myrmecia ants have an average length of 24 mm, cf. the average human being at 1.65 m. So 11 m equates to ≈ ¾ km (≈ ½ mile). Consider too the relative proportions of objects en routeஉரைக்குத் திரும்பு.
  8. Ref. 6, p. 65. உரைக்குத் திரும்பு.
  9. Catchpoole, D., Over-engineering in nature: an evolutionary conundrum, creation.com/overengineering-conundrum, 23 Nov 2021. உரைக்குத் திரும்பு.

Further Reading